இந்தியா முழுவதும் இன்று ராம நவமி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா திருக்கோவில் ராமநவமி முன்னிட்டு காலை முதலே சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது மேலும் தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர் மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் சாய்பாபா கோவிலில் நடைபெற்ற பாலாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.