தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள ரேகட அள்ளிகிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கார்த்திக் (43). இவருக்கு திருமணம் ஆகிகயல்விழி (38) என்ற மனைவியும், கனிஷ்கா, கீர்த்தி என்ற 2 மகள்களும், இளம்பரிதி என்ற மகனும் உள்ளனர். கார்த்திக், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் கிரஷர் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு தனக்கு சொந்தமான மத்தூரில் இருந்து ரேகடஅள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார். சில்லார அள்ளி அருகே வந்து கொண்டிருந்தபோது தனக்கு பின்னால் வந்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் ஓட்டி வந்த பைக் கார்த்திக் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கார்த்திக்கின் தலை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து கடத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ் பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.