தேர்தல் விதியை மீறியதாக பா. ம. க. வினர் மீது வழக்கு பதிவு

78பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் கடந்த 10-ந் தேதி பா. ம. க. வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டது. இதற்காக, 9-ந்தேதி மாலை தேர்தல் விதிமுறைகளை மீறி பாமக கட்சி கொடிகளை பா. ம. க. வினர் கட்டி கொண்டிருந்தனர். இந்த தேர்தல் விதிமீறல் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் பா. ம. க. வினர் 6 பேர் மீதுவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி