தர்மபுரி: பைக் மீது மோதிய லாரி..வீடியோ!

4684பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, வயது 56 , தென்னை மரம் ஏறும் கூலி வேலை செய்து வந்தார். நேற்று இரவு, பழனிசாமி தனது பைக்கில் தென்கரைகோட்டைக்கு சென்றார். சிந்தல்பாடி -தென் கரைகோட்டை சாலையில், ஸ்ரீ ஜெயம் வேபிரிட்ஜ் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த பழ னிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி அங்கம்மாள், 55, அளித்த புகார்படி, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி