காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

77பார்த்தது
தர்மபுரி வட்டார வேளாண் துறை உதவி இயக்குனர் தினேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தர்மபுரி வட்டாரத்தில் காரீப் பருவ பயிர்கள் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நடப்பு ஆண்டு 2024- 2025 பருவத்திற்கான நெல்-1 கார் பருவம் மற்றும் காரீப் பருவம் பயிர்கள் பருத்தி-1, மக்காச்சோளம், நிலக்க டலை, துவரை, ராகி மற்றும் சோளம் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவ சாயிகள் காப்பீடு செய்யலாம். குறுவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்ட பயிர்களை, சாகுபடி செய்யும் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் பயன்பெற தகுதியானவர் கள். பயிர் கடன் பெறும் விவசாயிகளும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், பதிவு படி வேளாண் அதிகாரி அறிவுரை அடங்கல் (அ) பயிர் சாகுபடி சான்று, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தக முன் பக்க நகல், சிட்டா ஆகிய ஆவ ணங்களை சமர்ப்பிக்க வேண்டும். எனவே, நெல்-1, கார் பருவம் மற்றும் காரீப் பரு வம் பயிர்கள் பருத்தி-1, மக்காச்சோளம், நிலக்க டலை, துவரை, ராகி மற் றும் சோளம் பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இத்திட்டத்தில் பெருமளவில் சேர்ந்து பயனடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி