மாற்றுத்திறனாளி இளம்பெண் பலாத்கார முயற்சி; வாலிபர் கைது

58பார்த்தது
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, ஜம்மனப்பட்டியை சேர்ந்த ரஜினி என்பவர், புது ஜீவா நகரில் ஒரு வீட்டின் குடும்ப நிகழ்ச்சிக்காக பந்தல், ரேடியோ, சீரியல் செட் அமைத்திருந்தார்.
இவர் மகன் கவினேஷ், 20, தந்தைக்கு உதவியாக அங்கிருந்தார். நேற்று இரவு, அங்கு நின்றிருந்த, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக, துாக்கிச் சென்று பாலியல் பலாத்கார செய்ய முயற்சித்துள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பெண்ணின் தந்தை மகளை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், கவினேஷை கைது செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி