அரூர்: அரசு பஸ் மீது லாரி மோதல்..வீடியோ!

4668பார்த்தது
சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ்சை வெங்கடேஷ் என்பவர் ஓட்டிச்சென்றார். பஸ் மஞ்சவாடி கணவாய் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அரூரில் இருந்து சேலம் நோக்கி பழைய இரும்பு ஏற்றி வந்த லாரி வேகமாக வந்தது.

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி, அரசு பஸ் மீது மோதியது. இதில் லாரியை ஓட்டி வந்த பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி