ஏரியில் மண் கடத்திய வாலிபர் கைது

71பார்த்தது
காரிமங்கலம் அடுத்த பந்தாரஅள்ளி ஏரியில் இருந்து சட்ட விரோதமாக மண் கடத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில், காரிமங்கலம் போலீசார் மொரப்பூர் ரோட்டில்
ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்
கொண்டனர். அப்போது பந்தாரஅள்ளி ஏரியில் இருந்து மண் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார்
மண் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் உரிமையாளரான,
போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ்(32). என்பவரைகைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி