சீரியம்பட்டியில் எருது விடும் விழாவில் 10 பேர் காயம்

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சீரியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 11ஞாயிற்றுக் கிழமை நேற்று காலை 11 மணிக்கு எருது விடும் விழா நடைபெற்றது 15 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. குல வழக்கப்படி கோபூஜை செய்து புனித நீரை காளைகளின் மேல் தெளித்தனர் முதலில் ஊர் கவுண்டர் காளைகளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளப்பட்டன. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டு சென்றனர்.

போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படாமல் இருந்தால் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் காளைகள் மோதி படுகாயம் அடைந்தனர் அவர்களை அங்கிருந்து அவர்கள் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி