தர்மபுரி மாவட்டம் பெரியப்பட்டி பகுதியில் கோட்டப்பட்டி எஸ்ஐ விஜயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்தவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்தனர். இதில், விற்பனைக்காக 125 மதுபாட்டில்கள் கொண்டு சென்றது தெரியவர, அதே பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் (47) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ₹25 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை கைப்பற்றினர். வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.