தர்மபுரி: கதறி அழும் குடும்பத்தினர்

4476பார்த்தது
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள மேல் ஆண்டி அள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாய கோவிந்தசாமி இவருக்கு வயது 53 இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்ட போதும் வயிற்று வலி குணமாகததால் நேற்று மாலை நெற்பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தீவிர சிகிச்சையில் இருந்தவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி