பொதுமக்களுக்கு பாடுபடுவதாக கூறி பாமக வேட்பாளர் பிரச்சாரம்

63பார்த்தது
தேசிய ஜனநாயக கூட்டணியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணி அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெலவள்ளி, கொங்கரப் பட்டி கைகால்குட்டை கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது
மக்களிடையே பேசும்போது இந்த பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைக ளையும் தீர்த்து வைக்க மாம்பழம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அடிப்படை தேவைகளான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றவும், வேலை வாய்ப்பு பிரச்சினைகளை தீர்க்க சிப்காட் அமைக்க பாடுபடுவதாகவும் அதற்கு பொதுமக்கள் மாம்பழம் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி