மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

559பார்த்தது
தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சாமிக்கண்ணு, பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் அறிவழகன் கோரிக்கை களை விளக்கிப் பேசினார். கூட்டுறவு வங்கி ஊழியர் களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மருத்து வப்படி, பயணப்படி, அகவி லைப்படி ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும். பறிக்கப்பட்டுள்ள உரிமை கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். பிறபொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதைப் போல 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும். 2015-2016 பணியாளர்களுக்கு பனி மூப்பு பட்டியல் வெளியிட வேண்டும். பணி நிலையில் உள்ள 3: 1 என்ற நடைமுறை யினை நீக்க வேண்டும். மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி