அமலாக்கத்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு

949பார்த்தது
அமலாக்கத்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்குமாரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்சம் ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கோரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி மோகனா, ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி