கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் காலனியில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனம் திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவர் தப்பினர்.
இதில் விசாரணையில் இருவரும் கொள்ளிடம் விஜய் வயது 23, வதிஷ்டபுரம் பாலகணபதி வயது 21 என்பது தெரிய வந்தது. புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.