லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

59பார்த்தது
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்த முருகன், மனைவி சித்ரா, மகன் கேசவன், உறவினா் புதுக்கோட்டை பொன்னமராவதியை சோ்ந்த கருப்பையா மகன் சண்முகம் ஆகியோருடன் காரில் திருப்பதி சென்றாா். காரை இடையபட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராசு மகன் பாரதிராஜா ஓட்டினாா். திருப்பதியில் தரிசனம் முடித்துவிட்டு காரில் ஊருக்கு புறப்பட்டனா்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூா் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட லக்கூா் கைக்காட்டி அருகே நேற்று அதிகாலையில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது காா் மோதியது. இந்த விபத்தில் காா் ஓட்டுநா் பாரதிராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரிலிருந்த மற்றவா்கள் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you