கடலூரில் முதியவரை தாக்கிய வாலிபரை தேடல்

1572பார்த்தது
கடலூரில் முதியவரை தாக்கிய வாலிபரை தேடல்
கடலூர் அடுத்த சான்றோர்பாளையத்தை சேர்ந்த ராயர் மகன் அரங்கநாதன் அதே ஊரைச் சேர்ந்த நேரு என்கிற ரங்கசாமி மகன் அபினேஷ். இருவரது குடும்பத்திற்கு இடையே முன் விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் அரங்கநாதன் உறவினர் அசோக் வீட்டின் முன் உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அபினேஷ் மற்றும் அரங்கநாதனுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அபினேஷ், அரங்கநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அபினேஷை தேடி வருகின்றனர்.