வடலூர்: வேளாண்மை கருத்தரங்கம் நிகழ்ச்சி
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற கடலூர், விழுப்புரம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கான வேளாண் விளைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கண்காட்சி அரங்குகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்து பார்வையிட்டு கருத்தரங்கில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரகாஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.