கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜய் ஸ்ரீ முஷ்ணத்தை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்து கொள்ளும்படி தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த மாணவி எலி பேஸ்ட் விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். மயக்கமடைந்த மாணவி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபர் விஜயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.