பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நடைபெறும் மாபெரும் மின்னொளி மட்டைப்பந்து போட்டியை கடலூர் தெற்கு மாவட்ட பாமக செயலாளர் செல்வமகேஷ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான அணிகள் விளையாண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு பாமக தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் பரிசுகளை வழங்கினார்.