பட்டாசு ஆலை விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு

78பார்த்தது
பட்டாசு ஆலை விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாயின. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரமேஷ், கருப்பசாமி, அம்பிகா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி