தொடரும் கனமழை - செம்பரம்பாக்கம் ஏரியில் நிலவரம் என்ன?
24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 13.23 அடிக்கு தண்ணீர் உள்ளது. கொள்ளளவு கணக்கீட்டின் படி, 3645 மில்லியன் கன அடியில், 1223 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 260 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 134 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் 23 அடியை எட்டும் போது பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்படும். தற்போது 13 அடியே நீர் இருப்பதால், கனமழை தொடர்ந்தாலும் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு குறைவு என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.