காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும்: ராஜ்நாத் சிங் கருத்து

83பார்த்தது
காங்கிரஸ் கட்சி அழிந்துவிடும்: ராஜ்நாத் சிங் கருத்து
காங்கிரஸ் கட்சி இன்னும் சில ஆண்டுகளில் டைனோசர்கள் போல் அழிந்து விடும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பூசல்கள் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ போல இருப்பதாக விமர்சித்தார். ஒருவர் பின் ஒருவராக காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். 2024க்கு பிறகு இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி எங்கே என்று குழந்தைகள் கேட்பார்கள் என்றார்.

தொடர்புடைய செய்தி