பிரசார ஆட்டோ கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

2261பார்த்தது
பிரசார ஆட்டோ கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
கோவை கோவில்மேடு தவசி நகரை சேர்ந்தவர் கண்ணன் (48), ஆட்டோ டிரைவர். இவர் தமிழக முற்போக்கு மக்கள் கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தனது ஆட்டோவை பயன்படுத்தி வந்தார். கண்ணன் கவுண்டம்பாளையம் எம். ஜி. ஆர். , காலனியில் பிரசாரத்துக்காக ஆட்டோ ஓட்டி சென்றார். அப்போது மது போதையில் வந்த வாலிபர் ஒருவர் ஆட்டோவை வழிமறித்தார்.

பின் அவர் திடீரென அங்கிருந்த கல்லை எடுத்து ஆட்டோவின் கண்ணாடியை உடைத்தார். தொடர்ந்து ஆட்டோவை சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டு, கண்ணனை தாக்கினார். இதுகுறித்து கண்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தடாகம் ரோடு எம். ஜி. ஆர். காலனியை சேர்ந்த அமிர்தராஜ் (29) என்பவரை கைது செய்தார்

தொடர்புடைய செய்தி