கோவை தெலுங்குபாளையம் சுப்பிரமணிய உடையார் தெருவை சேர்ந்தவர் மனோஜ்(24). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று(செப்.29) அப்பகுதியில் உள்ள காலி இடத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மனோஜை கத்தி முனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூ. 1400 மற்றும் ஒரு செல்போனை பறித்து தப்பிச் சென்றார். இதுகுறித்து மனோஜ் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், செல்போன், பணம் பறித்த தெலுங்குபாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த ரஞ்சித் குரு(39), என்பவரை கைது செய்தனர்.