லியாபி கோவை கோட்டம் பொதுக்குழு கூட்டம் & பதவி ஏற்பு விழா!

61பார்த்தது
கோவை கோட்டம் எல். ஐ. சி முகவர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் & பதவி ஏற்பு விழா சித்தோடு - செல்லப்பம்பாளையம் கொங்கு மாளிகையில் நடைபெற்றது.

இவ்விழாவை லியாபி தென்மண்டலமண்டல தலைவர்களும்,
எல்ஐசி நிறுவனம் கோவை கோட்டத்தின் உயர் அதிகாரிகளும்,
லியாபி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கோவை கோட்டம் லியாபி துணைத் தலைவர் என். இராமசாமி வரவேற்புரை வழங்கினார்.
கோவை கோட்டம் லியாபி இணைச் செயலாளர் கே. பரமசிவம்,
செயலர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் வி. சந்திரசேகரன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். கோவை கோட்ட லியாபி தலைவர்
கோ. வெ குமணன் தலைமை உரையாற்றினார்.

தொடர்ந்து புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மற்றும் ஏற்புரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோட்டத்தின்
புதிய தலைவராக
கோ. வெ குமணன், செயலாளராக
எம். இராமசாமி, பொருளாளராக வி. சந்திரசேகரன்,
துணை தலைவராக
என். இராமசாமி,
அகில இந்திய செயற்குழு உறுப்பினராக எம். என். முருகானந்தம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். கோவை கோட்டம் லியாபியின் சாதனை மலரை வெளியிட்டு சிறப்பு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில்,
சென்னை கோட்டத்தின் செயலாளர் கதிர்வேல்,
வேலூர் கோட்டத்தின் செயலாளர் மாயக்கண்ணன்,
மற்றும்
கோவை கோட்டத்தின்
அனைத்து கிளைச் சங்க பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி