கோவைப்புதூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை

64பார்த்தது
கோவைப்புதூரில் பெண் தூக்கிட்டு தற்கொலை
கோவைப்புதூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி பச்சையம்மாள்(48). இவர் கடந்த சில ஆண்டுகளகா கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் வாழ்க்கையில் விரக்தியடைந்த பச்சையம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி