வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி

64பார்த்தது
வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி
கோவை பீளமேடு பாலாஜி நகரை சேர்ந்தவர் மாலைராஜ்(42). தேங்காய் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் ரோட்டில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாலைராஜிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர் கத்தி முனையில் மாலை ராஜை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1500 ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்து மாலை ராஜ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தது சத்தியமங்கலம் புளியம்பட்டியை சேர்ந்த வீட்டு தரகர் ராஜ்குமார்(24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி