சாம்பியன்ஸ் கராத்தே போட்டியில் கோவை வீரர்கள் அசத்தல்

71பார்த்தது
கோவாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கராத்தே போட்டியில்
கோயம்புத்தூரைச் சேர்ந்த அட்வென்ச்சர் அகாடமியின் வீரர்கள் அசத்தல்


கோவாவில் கடந்த மாதம் ஜூன் 26 மற்றும் 27, 2024 ஆகிய தேதிகளில் நடந்த சாம்பியன்ஷிப் ஆஃப் சாம்பியன்ஸ் கராத்தே போட்டியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அட்வென்ச்சர் அகாடமி ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்கள் பல்வேறு வெற்றிகளை அடைந்தனர். இந்தப் போட்டியில் தேசிய அளவிலான பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த அட்வென்ச்சர் அகாடமியின் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் முதலிடங்களைப் பிடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர். இம்முறை போட்டியில் பங்கேற்ற வீரர்கள் தங்களது துடிப்பான போராட்டம் மற்றும் சீரான பயிற்சியின் மூலம் தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.


அட்வென்ச்சர் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் சென்செய். அறிவழகன் , தனது அணி வீரர்களின் வெற்றிக்கு மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள். மேலும், எதிர்காலத்தில் அவர்களை மேலும் பல வெற்றிகளுக்குத் தயாராக்க உள்ளனர் என்றார்.

இதில் அட்வென்சர் அகாடமி யின் துணை பயிற்சியாளர்கள் சென்செய். மனோஜ் பிரபாகரன், சென்செய். பிரக்காதீஷ் ராஜா பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி