சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல்துறையினர் குரும்பபாளையம் பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மகன் மணிமாறன், முத்துப்பாண்டி மகன் செந்தூர்பாண்டி, கண்ணன் மகன் கோபிநாத் மற்றும் அஷ்ரப் அலி மகன் ஷகிம் ஹாசன் ஆகியோர்கள் 1½ கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேற்கொண்டு விசாரணை செய்ததில் மேற்படி நபர்கள் மதுரை பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரியவந்தது. எனவே, தனிப்படை காவல்துறையினர் மேற்படி நபர்களை 1½ கிலோ கஞ்சாவுடன் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.