தொழிலாளர்களை வஞ்சிக்கும் விடியா
திமுக அரசை கண்டித்தும், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற கோரியும் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு
போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்கவும், கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா எஸ். பி. வேலுமணி வழிகாட்டுதலின்பேரிலும், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் ஆலோசனையின்பேரில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் மாபெரும் கண்டன
ஆர்ப்பாட்டம் அண்ணா தொழிற்சங்க
போக்குவரத்து மண்டல செயலாளர் சி. டி. சி எம். சின்னராஜ் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட செயலாளர் ஆட்டோ எஸ். ஜே. அசோக்குமார், அண்ணா
போக்குவரத்து தொழிற்சங்க மண்டல பொருளாளர் சி. டி. சி ஏ. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்பபாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் துணைச் செயலாளர் ஏ. டி. சி. பொன் தனபால் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.