எஸ். பி. வேலுமணி இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம்.

51பார்த்தது
முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ். பி. வேலுமணி இறுதிகட்ட சூறாவளி பிரச்சாரம்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
காந்தி பார்க் பூங்காவில் உடற்பயிற்சி மேற்கொண்டு இருந்த இளைஞர்கள், மற்றும் இறகுப்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள், நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி. மேலும் அந்தப் பகுதியில் இறகுப்பந்து பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்களுடன் சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடி இளைஞர்களை மகிழ்வித்தார்.

அதை தொடர்ந்து முத்தண்ணன் குளக்கரை ஓரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடத்திலும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.

மேலும் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் குழு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர் இந்த நிகழ்ச்சியில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி