நகை வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க செயின் திருட்டு

59பார்த்தது
நகை வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க செயின் திருட்டு
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் ஊழியர்கள் வழக்கம் போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நகை வாங்க வந்தார். அவர் ஒவ்வொரு நகையாக பார்த்துவிட்டு மற்றொரு நாளில் வந்து வாங்குவதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். பின்னர் இரவில் கடை ஊழியர்கள் நகை இருப்பை சரி பார்த்தனர். அப்போது ரூ. 1 லட்சம் மதிப்பிலான இரண்டு பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரிய வந்தது. நகை கடை நிர்வாகத்தினர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து 2 பவுன் தங்க செயினை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து நகை கடை நிர்வாகம் சார்பில் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி