அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

1546பார்த்தது
கோவையில் போட்டியிடும் அண்ணாமலைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக சார்பாக மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் அண்ணாமலை ஆதரித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மகளிர்கள் கோவை 100 அடி சாலையில் இருந்து சிவானந்த காலனி வரை ஒன்று சேர்ந்து கையில் கொடிகள் ஏந்தி நடந்து சென்றனர். பேரணி நடைபெறும் சாலையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.