தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2. 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1. 87 லட்சம் பேர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www. tneaonline. org இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.