புழல் சிறை கைது தப்பியோட்டம்

51பார்த்தது
புழல் சிறை கைது தப்பியோட்டம்
போலீசாரின் பாதுகாப்பை தாண்டி தந்தையின் ஈமச்சடங்கில் கலந்துகொண்ட புழல் சிறை கைதி தப்பி விட்டார். சென்னை பாடியநல்லூர் ஜோதி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (48). இவர் கஞ்சா வழக்கில் கடந்தாண்டு மதுரை அடுத்த திருப்பாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவரது தந்தை ஆறுமுகம் 2 வாரத்துக்கு முன்பு இறந்துவிட்டதால் அவரது ஈம காரியம் நேற்று செங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நீதிபதியிடம் 2 நாட்கள் பரோல் கேட்டு கிடைத்ததும் மதுரை சிறையில் இருந்து ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 6 போலீசார் பாதுகாப்புடன் பாடியநல்லூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். இதன்பின்னர் அங்கு நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட பரமேஸ்வரன் திடீரென தப்பி ஓடிவிட்டார். இதனால் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து பரமேஸ்வரனை தேடியும் தகவல் கிடைக்கவில்லை. இதுசம்பந்தமாக கொடுக்கப்பட்ட புகாரின்படி, செங்குன்றம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றார். மேலும் பரமேஸ்வரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி