தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

67பார்த்தது
தென் மாவட்ட பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
இன்று முதல், முன்பதிவு செய்த, செய்யாத பயணிகள், தென் மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள CMBT நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்று இயக்கப்பட உள்ள நிலையில், பொது மக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதுகிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இன்றுமுதல் முழுமையாக இயக்க இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களுக்கு SETC பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். சாதாரண நாட்களில் 300, வார இறுதி நாட்களில் 360 SETC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு மாநகரப் பேருந்துகள் இயக்கபடுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு 5 நிமிட இடைவெளியில் 270 நடைகள் பேருந்து இயக்கம். பொங்கல் பண்டிகை வரை சென்னையில் இருந்தும் ஆம்னி பேருந்துகள் வெளியூர்களுக்கு செல்லும். பொங்கல் பண்டிகைக்கு பின் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே செல்லும் என அறிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி