பட்டாக்கத்தியால் வெட்டுவது போல ரீல்ஸ்: 5 சிறுவர்கள் கைது

79பார்த்தது
பட்டாக்கத்தியால் வெட்டுவது போல ரீல்ஸ்: 5 சிறுவர்கள் கைது
காசிமேடு பகுதியில் சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து பட்டாகத்தியை வைத்து ஒரு சிறுவனை வெட்ட முயற்சிப்பது போலவும், அதற்கு அந்த சிறுவன் ‘வெட்டாதீங்க. வெட்டாதீங்க. ’ என்று கெஞ்சுவது போலவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதன் அடிப்படையில் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் 5 சிறுவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், காசிமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் 17 வயது தம்பி மற்றும் அவருடைய கூட்டாளிகள் என 5 பேர் தான் இந்த வீடியோவை எடுத்து, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் விளையாட்டாக வீடியோவை எடுத்தோம் என்றனர். சிறுவர்கள் மீது ராயபுரம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், ஆதம்பாக்கம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. 5 பேரையும் கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி