மீனவர்கள் 7வது நாளாக போராட்டம்...!

67பார்த்தது
மீனவர்கள் 7வது நாளாக போராட்டம்...!
எண்ணூரில் கோரமண்டல் என்ற தனியார் உர தொழிற்சாலையில் குழாய் உடைந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த, தொழிற்சாைலையை மாசுக்கட்டுப்பாடு வாரியம் தற்காலிகமாக மூட உத்தரவிட்டு, அதற்கான நோட்டீசை அந்த நிறுவனத்திடம் வழங்கியுள்ளது.

ஆனால், உர தொழிற்காலையை நிரந்தரமாக மூடக்கோரி, வீடுகளில் கருப்பு கொடியேற்றிய பொதுமக்கள், அந்த நிறுவன நுழைவாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி, 33 கிராம மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள், சமூக நல ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 7வது நாளாக நேற்றும் மீனவர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிட்டோஇதனிடையே, திருவொற்றியூர் எம்எல்ஏ கே. பி. சங்கர் நேற்று எண்ணூர் பாதுகாப்பு குழு மற்றும் கிராம நிர்வாகிகள் ஆகியோருடன் சென்ைன மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதில், எண்ணூர் கோரமண்டல் தனியார் தொழிற்சாலையில் குழாய் உடைந்து, அமோனியா வாயு கசிவுக்கு காரணமானஉர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி