பெருங்குடியில் பூங்கா அமைப்பதற்கு கருத்து கேட்பு

51பார்த்தது
பெருங்குடியில் பூங்கா அமைப்பதற்கு கருத்து கேட்பு
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், மேயர் பிரியா முன்னிலையில் வரும் 8ம்தேதி பள்ளிக்கரணையில் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சராசரியாக 5, 100 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவை பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை ₹354 கோடி மதிப்பீட்டில் பயோ-மைனிங் முறையில் பிரித்தெடுத்து, நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த குப்பை கொட்டும் வளாகத்தில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி