வாக்குப் பதிவு இயந்திரங்கள்: ஆர். எஸ். பாரதி வலியுறுத்தல்

75பார்த்தது
வாக்குப் பதிவு இயந்திரங்கள்: ஆர். எஸ். பாரதி வலியுறுத்தல்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, இவிஎம் இயந்திரம் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நியாயமான சந்தேகம் வந்திருக்கிறது. இந்த சந்தேகத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்தகால நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களவைத் தேர்தலில், திருப்பத்தூர் தொகுதியில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக வேட்பாளர் வேணுகோபால், ஏறத்தாழ 200-250 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்று, 5 ஆண்டு காலம் எம். பியாகவும் அவர் இருந்தார். அதேபோல கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில், விசிக தலைவர் திருமாவளவன் 3000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார்.

எனவே, 46, 000 வாக்குகள் வரை தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. எனவே, அந்த குறை திருத்தப்பட வேண்டும், என்று தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம். ஆனால், தேர்தல் ஆணையத்திடம் இருந்து அது தொடர்பாக உரிய பதில் வரவில்லை. இந்த குறை தேர்தலுக்கு முன்பாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி