ஏப். 19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

1079பார்த்தது
ஏப். 19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ஏப். 19-ல் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளர் துறை ( தொழிலாளர் இணை ஆணையர்-1, சென்னை ) சார்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 135 ( B )-ன் கீழ் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரைகளின் படி, தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களான தினக் கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு அவர்கள் வாக்களிக்க ஏதுவாக தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர் துணை ஆய்வாளர் ( வட சென்னை ) சி. விஜய லட்சுமி 9840829835, தொழிலாளர் துணை ஆய்வாளர் ( தென் சென்னை ) இ. ஏகாம்பரம் 9790930846, தொழிலாளர் துணை ஆய்வாளர் ( மத்திய சென்னை ) ஆர். வேத நாயகி 9884264814 ஆகியோரை மேற்கூறிய செல்போன் எண்களிலும், 044-24330354 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி