பொங்கல் தொகுப்பு உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

74பார்த்தது
பொங்கல் தொகுப்பு உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
சென்னை: "தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு விவசாயிகளிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ. 50 வீதம் விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்", என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கவிருக்கும் நிலையில், அடுத்த இரு வாரங்களில் கொண்டாடப்பட உள்ள பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. போதிய வாழ்வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வசதியாக, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பொங்கல் திருநாளுக்கும் அரிசி வாங்குவதற்கான குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ரூ. 1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும். இதை உடனே அறிவிக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி