தயாநிதி மாறன் பரப்புரை

56பார்த்தது
தயாநிதி மாறன் பரப்புரை
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் துறைமுகம் மேற்கு பகுதியில் நேற்று வீதி வாரியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன், அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுகவினர், கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் சென்று ஆதரவு திரட்டினர். அப்போது, தயாநிதி மாறன் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற இந்தியா கூட்டணி சார்பாக திமுக சார்பாக என்னை உங்களிடம் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். உங்கள் மீது உள்ள நம்பிக்கையில்தான். கண்டிப்பாக இந்த தேர்தலில் நீங்கள் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஒவ்வொருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைப்பேன் என்று சொன்னவர் அதை மறந்து விட்டு ஒரு ரூபாய் கூட யாருடைய கணக்கிலும் வரவு வைக்கவில்லை. இதுவரை மொத்தம் தமிழகத்திற்கு 8 முறை வந்துள்ளார். ஆனால் வரலாறு காணாத வெள்ளம் வந்தபோது வரவில்லை. நமக்கு துன்பம் வந்த போது நமது முதல்வர் உடனே டெல்லி சென்று மோடியிடம் கேட்டதற்கு இதோ தருகிறேன் என்று கூறிவிட்டு ஒரு நயா பைசா கூட தரவில்லை. ஆனால் நமது முதல்வர் நான் தருகிறேன் என்று கூறி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 6000 தந்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி