நடப்பாண்டில் குற்ற சம்பவங்கள் குறைவு...!

66பார்த்தது
நடப்பாண்டில் குற்ற சம்பவங்கள் குறைவு...!
புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், நடப்பாண்டில் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன.

இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னையில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் மாவட்டங்களில் புளியந்தோப்பு காவல் மாவட்டமும் ஒன்று. இந்த காவல் மாவட்டத்தில், கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ், புளியந்தோப்பு, ஓட்டேரி, செம்பியம், திருவிக நகர் ஆகிய 8 காவல் நிலையங்களும் புளியந்தோப்பு, எம்கேபி நகர், செம்பியம் ஆகிய 3 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் உள்ளன. எம்கேபி நகர், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்றச் செயல்கள் சற்று அதிகமாக நடைபெறும் பகுதிகளாக உள்ளன.

தற்போது, போலீசாரின் அதிரடி நடவடிக்கையால், இந்த காவல் சரகத்தில் படிப்படியாக குற்ற செயல்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2023ம் ஆண்டு குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இந்த காவல் மாவட்டத்தில் 2022ம் ஆண்டு 10 கொலைகள் நடைபெற்றன. 2023ம் ஆண்டும் 10 கொலைகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. இதேபோன்று இந்த ஆண்டு சுமார் 60 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்குகளை பொறுத்தவரை கடந்த 2022ம் ஆண்டு 60 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you