அண்ணா மேம்பாலத்தில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம்

4227பார்த்தது
அண்ணா மேம்பாலத்தில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம்
அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணி நடைபெறுவதால், அப்பகுதிகளில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில் சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல, கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்திசாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையலாம். இது ஒருவழிபாதையாக செயல்படும்.

இதேபோல, அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்ஜிஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லலாம். (மாற்றுப் பாதை ஒருவழி பாதை).

அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல, டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லலாம்.

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாகவோ, அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை சாலை, ஜி. என். செட்டி சாலை வழியாகவோ அண்ணா மேம்பாலம் செல்லலாம்.

இதேபோல, பிற உட்புற சாலைகளிலும் தேவைக்கு ஏற்பபோக்குவரத்து மாற்றம் செய்யப்படும். பிப்ரவரி 11-ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி