குடியரசு தின விழா: பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

55பார்த்தது
குடியரசு தின விழா: பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு
குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். குடியரசு தின விழா வரும் 26-ம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர். என். ரவி ஏற்றிவைக்கிறார். விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். முப்படைகள், காவல் துறையின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி