தொழிற்சங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வைகோ

51பார்த்தது
தொழிற்சங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 15வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளன. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், தைத் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு தொழிற்சங்கங்களுடன் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும்.

தொடர்புடைய செய்தி