முதல்வரை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும்: திமுக தலைமை..!

65பார்த்தது
முதல்வரை சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும்: திமுக தலைமை..!
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு முதல்வர் சந்திக்க வருவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வருவதை, அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கட்டாயம் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி