வேளாண் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

81பார்த்தது
வேளாண் பட்ஜெட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
உழவர்கள் வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம். திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது. மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன் என்று வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்தால் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தோம். சொன்னதைச் செய்து காட்டும் இந்த அரசானது, ஆட்சிக்கு வந்த உடனேயே வேளாண் அறிக்கையைத் தயாரித்துத் தாக்கல் செய்தது. தாக்கல் செய்த அறிக்கையின்படி செயல்பட்டது. இதன் மூலமாகத் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு அதிகமானது. விளைச்சல் அதிகமானது. உற்பத்தியான பொருளுக்கு நல்ல விலை கிடைத்தது. உழவர் பெருமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடையும் வகையில் பலனைப் பெற்றார்கள்.

உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாக திமுக அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி